> என் ராஜபாட்டை : கதம்பம் 24-10-13

.....

.

Thursday, October 24, 2013

கதம்பம் 24-10-13



                  மிக நீண்ட இடைவெளிக்கு பின் உங்களுக்காக  கதம்பம் .



போராட்டம் :



அது என்ன விசித்திரம் என்று  தெரியவில்லை நமது நாட்டில் அரசியல்கட்சிகள் நடத்தும் எந்த போராட்டமும் ( ரயில் மறியல் , பஸ் மறியல் , சாலைமறியல் ) அந்த கட்சி தலைவர்கள் பிறந்தநாள் அல்லது அவர்கள் குடும்ப விழா நடக்கும் நாளில் மட்டும் நடப்பதில்லை . அவர்களுக்கு வசதியான நாளில் வைத்துவிட்டு அப்பாவி மக்களைத்தான் கஷ்டபடுத்துகின்றனர் . 

அமெரிக்காவை எதிர்த்து போராட்டம் நடத்தினால் கூட நம்ம ஊர் பஸ்சை  மறைத்துதான் நடத்துகிறார்கள் . காங்கிரஸ் கூட தான் கூட்டணி என முடிவு சொல்லிவிட்டு அவர்களை எதிர்த்து ரயில் மரியலாம் . இன்னும் பல தலைவர்கள் மக்களை ஒன்னும் தெரியாத மடையர்கள் என்றே நினைக்கிறார்கள் . 


பார்த்த படம் :



பலவருடங்களுக்கு முன் கேட்ட , இப்பவும் பார்க்க நினைத்த படம் "முகமது பின் துக்ளக் " . YOUTUBE இல் வேறு எதோ தேடும் போது கிடைத்தது . பிரின்ட் சரியில்லை என்றாலும் , சோ வின் பல வசனங்கள் செம . நிறைய வனங்கள் இன்றைய அரசியல் நிலைக்கும் ஒத்து  வர கூடியவை தான் .

அவற்றில் சில :

          : இதுவரை நீங்கள் ஓட்டு போட்டு ஜெயக்கவைதவர்கள் உங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை . நானும் செய்யபோவதில்லை . எனவே எனக்கு ஒருமுறை ஓட்டு போடுங்கள் "


          " அடுத்த தேர்தலை பற்றி நினைப்பவன் அரசியல்வாதி
தனது அடுத்த தலைமுறையை பற்றி நினைப்பவன் தலைவன் "

        "மக்கள் ஒரு பிரச்சனையை பற்றி தீவிரமாக பேசுவார்கள் . அடுத்த பிரச்சனை வந்துவிட்டால் முந்தய பிரச்சனையை மறந்துவிடுவார்கள் "

      "நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிமாருவர்கள் என தெரியும் இப்படி இவ்வளவு வேகமா மாறுவாங்கன்னு தெரியாது "

முடிந்தால் பாருங்கள் .


பார்த்து நொந்த படம் :


என் வாழ்நாளில் இரண்டு படங்கள் மட்டுமே பாதி பார்பதுக்குள்  தூக்கம் வந்தது . ஒன்று யா யா . மற்றது தனுஷின் "நையாண்டி ". படம் பார்க்க வருபவர்களை நையாண்டி செய்ய போகிறோம் என சிம்பாலிக்கா சொல்லத்தான் இப்படி பெயர் வைத்தார்களோ என்னவோ ,படம் செம போர் . இதுல நஸ்ரியா இடுப்பு பிரச்சனை வேறு . போங்கடா நீங்களும் உங்க படமும் .

படித்த புத்தகம் :


பதிவர் சந்திப்பில் டிஸ்கவரி புக் பேலஸ் வைத்திருத்த ஸ்டாலில் "ராஜீவ் கொலையும் தமிழர்கள் மீதான பழியும்  " என்ற புத்தகம்  வாங்கினேன் . இபோதான் படிக்க நேரம் வந்தது .

அதை படித்தபின் ஒரு கொலை வழக்கில் இவ்வளவு ஓட்டைகள் உள்ளது . நீதி துறை எப்படி இதை கண்டுகொள்ளாமல் உள்ளது என ஆச்சர்யமாக உள்ளது . உண்மையான காங்கிரஸ் காரர்கள் இதைப்படிக்க வேண்டும் . அப்புறம் சத்தியமா அவன் காங்கிரசில் இருக்கமாட்டன் .

ரசித்தது :


வக்கிலிடம் பிரச்சினையுடன் ஒருத்தார் வந்தார்,
வக்கீல்: என்ன பிரச்சினை?
வந்தவர்; சார், என் நண்பர் என்னிடம்
ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கி ஓரு வருஷம்
ஆச்சு சார். இந்தா தரேன்
அந்தா தரேன்னு இழுத்து அடிக்கிறார்.
வக்கீல்: ஏதாவது எவிடன்ஸ் இருக்கா?
வந்தவர்: ஒன்னும் இல்லை சார்.
வக்கீல்: அப்படின்னா அவருக்கு நீங்க கொடுத்த
ஓரு லட்ச்சத்தை எப்போ திருப்பி தரேன்னு கேட்ட
எழுதுங்க
வைத்தவர்: அம்பதாயிரம் தானே சார்.
வக்கீல்: உங்களிடம் கடன் வாங்கியவரும்
இதையே சொல்லி பதில் எழுதுவார் . அதான்
எவிடன்ஸ். அதை எடுத்து கொண்டு வாங்க
பேசிக்கலாம்.





இதையும் படிக்கலாமே :

8 comments:

  1. உங்கள் பதிவும் அந்த வக்கீலின் மூளைப் போன்றே அபாரம் ராஜா !
    இன்ட்லியில் பரிந்துரைக்கிறேன் !

    ReplyDelete
  2. கதம்பம் நல்லாவே வாசம் வீசுச்சு. அதுலயும் ரயில் மறியல், ராஜீவ் கொலை வழக்கும், துணுக்கும் நச்

    ReplyDelete
  3. முகமது பின் துக்ளக் என்றைக்கும் பொருந்தும்... மற்ற கதம்பங்களுக்கு நன்றி...

    ReplyDelete
  4. மணம் வீசியது கதம்பம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. சூப்பர் கதம்பம்... அது சரி, அந்த முதல் படம் எதுக்கு?

    ReplyDelete
  6. உங்கள் கதம்பம் நல்லா கலர்புல்லாதான் இருக்கு.

    ReplyDelete
  7. I seldom read articles from beginning to end as they usually have poor content and are dull. I really appreciate this article because it has great content and it's interesting.

    kizi 2

    Free Online Games

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...