> என் ராஜபாட்டை : விஜய் ரசிகர்கள் வாழ்க ....

.....

.

Wednesday, March 4, 2015

விஜய் ரசிகர்கள் வாழ்க ....








                         இன்றைய தமிழ் சினிமாவில் வசூல் நாயகன் , அடுத்த சூப்பர் ஸ்டார் என தனது ரசிகர்களால் கொண்டாடப்படும் இளைய தளபதி "விஜய் " தான். இவரது படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுகிறது அதே சமயம் பல பிரச்சனைக்குள்ளலாகிறது . அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என குழம்பி இருப்பதில் அடுத்த ரஜினி இவர் .

                  இவருக்கு தமிழ் நாட்டில் பல கோடிகணக்கான ரசிகர்கள் இருகின்றனர் . பல்லாயிரகணக்கான ரசிகர் மன்றங்கள் இருக்கிறது. தனது ரசிகர்களை வெறும் கைதட்டலுக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ள கூடாது என்ற எண்ணத்தில் விஜய் மக்கள் இயக்கம் என ஒன்று துவங்கி அதன் மூலம் பல மக்கள் நல திட்டங்களை செய்துவந்தார், வருகிறார் .


          இப்போது தமிழகத்தில்விவசாய மாவட்டமான தஞ்சை டெல்டா பகுதியில் மீதேன் என்னும் அரக்கனை களமிறக்க அரசு முயல்கிறது . இதை எதிர்த்து பல அரசியல் கட்சிகள் போராட்டங்கள் , கடையடைப்புகள் , கவன ஈர்ப்பு என நடத்தி வருகிறது என்பது நமக்கு தெரியும் .

             இந்த மக்களில் வாழ்வாதார போராட்டத்திற்கு இதுவரை எந்த நடிகரும் குரல் கொடுக்கவில்லை , முதன் முதலாக விஜயின் ரசிகர் மன்றத்தினர் இரண்டு தினகளுக்கு முன்பு மீதேன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர் . போலீசார் அவர்களை கைது செய்து பின்பு விடுதலை செய்தனர் .

               வெறும் சினிமா ரசிகனாக இல்லாமல் மக்கள் நலனுக்கு தேவையான ஒரு விஷயத்தில் போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்களை பாரட்ட வார்த்தைகள் இல்லை . வெறும் விசிலடிச்சான் குஞ்சுகள் என இனி யாரும் அவர்களை கிண்டல் செய்ய முடியாது . 35  பேர் மட்டுமே கலந்துகொண்டனர் என்பது கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் இது ஆரம்பம்தான் .


               விஜயின் மற்றரசிகர்களும் போராட்டத்தில் இறங்கினால் , அவர்களுடன் அஜித் , ரஜினி, கமல் ,விக்ரம் என அனைத்து ரசிகர்களும் களம் இறங்கி போராடினால் மீதேன் திட்டத்தை ஒரேயடியாக நிறுத்தலாம் . நடக்குமா ?


இதையும் படிக்கலாமே :  

இலவசமாக ரீ - சார்ஜ் செய்ய ஒரு அருமையான இணையதளம்

2 comments:

  1. உங்களுக்கு நன்றி சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன் அப்பதிவை பார்க்க :- http://techtamilblog.blogspot.com/2015/03/50thpost.html

    ReplyDelete
  2. பரவாயில்லையே! ரசிகர்களும் இது போன்று நல்ல விடயங்களுக்குப் போராடினால் சினிமா என்பது மட்டுமின்றி சமுதாயத்திற்கு நல்லது நடக்கவும் வாய்ப்புண்டு. மாற்றங்கள் வர வேண்டும்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...